தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கனமழை: செங்கல்பட்டு, விழுப்புரத்தில் எச்சரிக்கை
Source: ABP Nadu