ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நாட்டை குறிவைத்து ஏவுகணை அச்சுறுத்தல் கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது. இதையடுத்து துபாயில் முதல் முறையாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எச்சரிக்கைக்கு சில நிமிடங்களில் சைரன் மற்றும் வெடிப்பு ஒலிகள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் மோதல் தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துபாயில் ஏவுகணை எச்சரிக்கை; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
Source: news18.com