மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழக அரசு 3 மாத அவகாசம் கோரிய நிலையில், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அடுத்த விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேகமலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் துணை ராணுவம்: உச்ச நீதிமன்றம்
Source: Dinakaran