சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆனந்த், முதலமைச்சர் விஜய் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஒரு சீட், 2 சீட், 5 சதவிகிதம் என இளக்காரமாக பேசியதாகவும், யூடியூப் மற்றும் டிவி சேனல்களில் வாடகை வாய்கள் பேசியதாகவும் கூறினார். விஜய் தனியாக தைரியமாக நிற்போம் என்று கூறியதாகவும், தவெகவில் 80 சதவிகித எம்.எல்.ஏக்கள் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் என தெரிவித்தார்.
விஜய் மீதான தாக்குதல்கள் குறித்து அமைச்சர் ஆனந்த் வேதனை
Source: ABP Nadu