தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், செப்டம்பர் 1 முதல் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்கு 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த முடிவை எதிர்த்து, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளனர். இப்பிரச்சினையை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளனர்.
செப்டம்பர் 1 முதல் தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Source: Filmibeat Tamil