சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,950க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள தங்கம் விலை நகை வாடிக்கையாளர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு
Source: Kumudam