மகாராஷ்டிராவின் பீட் நகரில் தெரு நாய் ஒன்று மூன்று வயது சிறுமியை தாக்கியதில் அவரது முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. சிவதேஜ் நகரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சிவான்ஷி கோலாப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பீட்டில் நாய் தாக்கி 3 வயது சிறுமிக்கு 12 தையல்கள்
Source: news18.com