இந்தியா தொடரில் ரச்சின் ரவீந்திரா விளையாடுவது சந்தேகம்

இந்தியா தொடரில் ரச்சின் ரவீந்திரா விளையாடுவது சந்தேகம்

விளம்பரப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஆக்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் அவரது வலது தோள்பட்டை காயமடைந்ததாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் பெரிய பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தாலும், அவர் மீண்டும் களமிறங்கும் காலம் பயிற்சியைப் பொறுத்தே அமையும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies