டெல்லியில் நடைபெறும் சிறப்பு திருத்தப் பணியில், வாக்காளர் பட்டியல் தரவுகளில் முரண்பாடு காரணமாக முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முதல்வர் ரேகா குப்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31-ல் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் 1.45 கோடி வாக்காளர்களில் 47.5 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். மொத்தம் 33 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி வாக்காளர் பட்டியல் முரண்பாடு: அத்வானி, கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
Source: Dinakaran