இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த அந்தோனி என்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படம், 2027 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கு இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனத்தால் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் இசை வரலாற்றில் இடம்பெற்ற முதல் இலங்கைத் தமிழ்ப் படம் இதுவாகும். சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கிய இப்படம் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆஸ்கர் போட்டிக்கு இளையராஜாவின் அந்தோனி திரைப்படம் தேர்வு
Source: IBC Tamil