மும்பையில் நடைபெற்ற ISSO Games 2026-27 சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் நடிகர் சிபிராஜின் மகனும் சத்யராஜின் பேரனுமான தீரன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் தீரன் சாதனை படைத்ததாக சிபிராஜ் இன்ஸ்டாகிராமில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். பயிற்றுநர் உ தயா லீ மற்றும் சிவ நாடார் பள்ளிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சத்யராஜ் பேரன் தீரன் டேக்வாண்டோவில் தங்கம்
Source: Filmibeat Tamil