சென்னை கிண்டியில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகத்தில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் கனிமவளத் துறை சார்ந்த பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கல்குவாரி, கிரஷர், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். குவாரி குத்தகை உரிமத்தை எளிமையாக்கவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
கனிமவள சங்கங்களுடன் அமைச்சர் டி.கே.பிரபு கலந்தாய்வு
Source: Daily Thanthi