மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான தயாரிப்பில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் லிசா கீட்லி தனது பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டது. 2024ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் WPL கோப்பையை வென்று கொடுத்த அனுபவம் வில்லியம்ஸுக்கு உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளதால், அணியை மீண்டும் போட்டித் திறனுடன் கட்டமைக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமனம்
Source: malaimurasu.com