ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் மூன்று பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா–வேலவன் செந்தில்குமார் இணை அரையிறுதிக்கு முன்னேறியது. ஒற்றையர் பிரிவில் அனாஹத் சிங், அபய் சிங் ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். ஒற்றையர் பிரிவு தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெறுவார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள் உறுதி
Source: news18.com