தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் மதுரையில் தென் மண்டல சட்டம் ஒழங்கு மற்றும் குற்ற நிலை குறித்து ஆய்வு நடத்தினார். சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத கிராமங்கள் உருவாக்கம் ஆகியவற்றை வலியுறுத்தினார். 65 காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், சிறப்பாகப் பணியாற்றிய 62 அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கினார்.
மதுரையில் சட்டம் ஒழுங்கு குறித்து டிஜிபி மகேஷ் குமார் ஆய்வு
Source: Daily Thanthi