நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, வடமேல், தென், வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: எச்சரிக்கை
Source: IBC Tamil