முதிய தம்பதியருக்கு தனது சைட்-லோயர் இருக்கையை விட்டுக்கொடுக்க மறுத்த இளைஞர், டிக்கெட்டின் 50% (₹1,050) செலுத்தினால் இருக்கையை தருவதாக கூறியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ₹2,100 கொடுத்து பதிவு செய்த இருக்கையை இலவசமாக விடுவது நியாயமா என்பது குறித்து பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதியோர், பெண்களுக்கு என தனி ஒதுக்கீடு இருந்தும் ஏன் கீழ் இருக்கை கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இரயிலில் இளையர் இருக்கை விட்டுக்கொடுக்க மறுப்பு: வைரல் சர்ச்சை
Source: news18.com