தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 05) தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் பாதிக்கப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை பல மாவட்டங்களில் மின்தடை: முன்னெச்சரிக்கை
Source: NewsBytes Tamil