எல்நினோ தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், 2026-27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய அரசு 373.93 மில்லியன் டன்னாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி 376.56 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், இது 2.63 மில்லியன் டன் குறைவு. மழைப்பொழிவு 12% குறைந்தாலும் பெரிய நெருக்கடி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சீரற்ற மழை வேளாண்மைக்கு சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எல்நினோ காரணமாக 2026-27 உணவு தானிய உற்பத்தி இலக்கு குறைப்பு
Source: BBC Tamil