சுவிக்கி செயலியில் காட்டப்பட்ட விலையை விட உணவகத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட வழக்கில், டெல்லி நுகர்வோர் ஆணையம் சுவிக்கி மற்றும் உணவகம் இணைந்து வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதிகமாக வசூலிக்கப்பட்ட ரூ.3,988 மற்றும் ரூ.254 சேவைக் கட்டணத்தை 9% வட்டியுடன் திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டது. ஆன்லைன் தளங்களும் விலை துல்லியத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
சுவிக்கி செயலி விலை மோசடி: ரூ.1 லட்சம் இழப்பீடு
Source: malaimurasu.com