இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்கள் தயாராக வேண்டும் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரவி ராம்பால் வலியுறுத்தியுள்ளார். ராஞ்சியில் நாளை நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மிடில் ஆர்டரில் ஷிம்ரன் ஹெட்மேயர், சாய் ஹோப் போன்ற வீரர்கள் நிலைத்து விளையாடினால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று ராம்பால் கூறினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்திய சுழற்பந்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: ராம்பால்
Source: Dinamani