தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படத் தொடங்கியது. திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தட மின்மயமாக்கல் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் என்ஜின் மாற்றுவதற்கான 20 நிமிட தாமதம் தவிர்க்கப்பட்டு, இரு மார்க்கங்களிலும் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைய வாய்ப்புள்ளது.
தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் முழு மின்சார இயக்கத்திற்கு மாற்றம்
Source: Daily Thanthi