தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநரும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவருமான நவநீதம் பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இனவெறி ஆட்சிக்கு எதிராக வழக்குரைஞராகத் தொடங்கிய அவரது பயணம், பன்னாட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாக மனித உரிமைகளைக் காத்ததன் மூலம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது. 1890-களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்ற குடும்பத்தின் வம்சாவளியில் பிறந்த அவர், தமிழர் என்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் வம்சாவளி நவி பிள்ளைக்கு அமைதி நோபல் பரிசு
Source: Viduthalai.in