ஓவன் இல்லாத வீடுகளிலும் சாதாரண கடாயைப் பயன்படுத்தி பேக்கரி போன்ற மென்மையான கேக் தயாரிக்கலாம். மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சர்க்கரை, தயிர், பால், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவை மட்டுமே தேவை. கடாயில் உலோக ஸ்டாண்ட் வைத்து, கேக் பாத்திரம் நேரடியாக அடிப்பகுதியைத் தொடாமல், குறைந்த தீயில் 30–45 நிமிடங்கள் வேகவிட வேண்டும். மூடியை அடிக்கடி திறக்காமல், கேக் முழுமையாக ஆறிய பிறகு வெட்டினால் அழகான துண்டுகள் கிடைக்கும்.
ஓவன் இல்லாமல் கடாயில் பேக்கரி ஸ்டைல் கேக் தயாரிக்கும் எளிய முறை
Source: Asianet News Tamil