டெல்லியில் CJP போராட்டத்தை முன்னிட்டு முடக்கப்பட்ட மெட்ரோ, தொடர்வண்டி சேவைகள் மற்றும் இணைய வசதிகளை உடனடியாக மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜே.பாக்சி, வி.மோகனா அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அமைதியாக நடமாடும் பொதுமக்களை தடுத்து வைக்கக் கூடாது எனவும், சட்டவிரோத கைது நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் மெட்ரோ, இணைய சேவைகளை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Source: malaimurasu.com