பெங்களூருவில் முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் எம்.எம். சோமையா வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் உட்படப் பல பதக்கங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். குடும்பத்துடன் குடகு சென்றிருந்த நேரத்தில் அக்டோபர் 28 அதிகாலை கதவை உடைத்து இச்சம்பவம் நடந்தது. ₹3.53 லட்சம் மதிப்பு எனக் கணக்கிடப்பட்டாலும் பதக்கங்களின் வரலாற்று மதிப்பு அளவிட முடியாதது.
சோமையா வீட்டில் கொள்ளை: ஒலிம்பிக் தங்கப் பதக்கம் திருட்டு
Source: NewsBytes Tamil