நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் ராவணன் கதாபாத்திரத்திற்காக யஷ் அணிந்த நகைகளின் மொத்த எடை 6 முதல் 7 கிலோ வரை உள்ளது. 'ஹவுஸ் ஆஃப் அம்ரபாலி' 13 லுக்குகளுக்காக 130 நகைகளை வடிவமைத்துள்ளது; படத்திற்காக 18 மாதங்களில் 4,500க்கும் மேற்பட்ட நகைகள் தயாராகின. ராவணனின் கம்பீரமும் சிவபக்தியும் பிரதிபலிக்கும் இந்த லுக் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ராமாயணத்தில் யஷ் அணிந்த ராவணன் நகைகள் 6-7 கிலோ
Source: Asianet News Tamil