ஜெனரலைஸ்டு ஆன்க்ஸைட்டி டிஸார்டரால் பாதிக்கப்பட்ட 25 வயது சோலே சன்டாரோவை மையமாகக் கொண்ட இத்தாலியத் திரைப்படம் ‘Jumping from High Places’ நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது. 2022-ல் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி டிராமா, தென் இத்தாலியின் அப்பூலியா கடற்கரை நகரைக் களமாகக் கொண்டு 88 நிமிடங்களில் நகர்கிறது. பால்யத் தோழி எம்மாவின் மரணத்திற்குப் பின் சோலேவின் வாழ்க்கைப் பயணத்தை இப்படம் பேசுகிறது.
பதற்றக் கோளாறுடன் போராடும் சோலே: இத்தாலியப் படம் அறிமுகம்
Source: Hindu Tamil Thisai