இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாத இந்திய கேப்டன் சுப்மன் கில், 2வது இன்னிங்ஸில் களம் இறங்கி 44 ரன்கள் எடுத்தார். இது அவரது காயம் தீவிரமானது அல்ல என்பதை உறுதி செய்துள்ளது. இந்திய அணி வரும் ஆகஸ்ட் 15 முதல் இலங்கையுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
சுப்மன் கில் காயம் குணமானதால் பயிற்சி போட்டியில் பேட்டிங்
Source: myKhel tamil