அமெரிக்காவில் 2026 இடைக்காலத் தேர்தலுக்கு முன், தபால் வாக்கு நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமல்படுத்தக் கோரி நீதித்துறை உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. கீழமை நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. மாநிலங்களின் தேர்தல் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறி பல மாநிலங்களும் வாக்குரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தபால் வாக்கு உத்தரவு: உச்சநீதிமன்றத்தை நாடியது டிரம்ப் நிர்வாகம்
Source: malaimurasu.com