சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 20,000 போலீசார் பணியில் உள்ளனர்; ராஜாஜி சாலையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினம்: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி
Source: Dinamani