குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தேர்வு முறையை மேம்படுத்த அரசு விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தேர்வுகளில் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழித்து, வெளிப்படையான, பாதுகாப்பான தேர்வு முறையை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று கூறினார். மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்று வலியுறுத்திய அவர், அவர்களின் நலனைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தேர்வு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது: குடியரசுத் தலைவர் முர்மு
Source: news18.com