2026ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, புலன் விசாரணை மற்றும் பொதுச் சேவையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது. இதில் 10 பேருக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணை சிறப்பு பணி பதக்கமும், 5 பேருக்கு சிறந்த பொதுச் சேவைக்கான காவல் பதக்கமும் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும்.
சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்
Source: Dinakaran