அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்ட்ரான், அடோப் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் மூத்த மென்பொருள் தரப் பொறியாளராக பணியாற்றியவர். ஆகஸ்ட் 2025-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை தேடியும் கிடைக்காததால், அவர் பள்ளி பேருந்து ஓட்டுநர் பணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். சம்பளம் குறைவாக இருந்தாலும், புதிய பணியில் மகிழ்ச்சியாக இருப்பதாக லிங்க்ட்இன் பதிவில் தெரிவித்துள்ளார்.
அடோப் பொறியாளர் பணிநீக்கம்; பள்ளி பேருந்து ஓட்டுநரானார்
Source: Maalaimalar