அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வியாழக்கிழமை பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் எட்டு பேர் இருந்தனர். கேப் நியூவென்ஹாம் அருகே விமானம் வீழ்ந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அலாஸ்காவில் விமான விபத்து: 8 பேர் பயணித்த விமானம் வீழ்ந்தது
Source: news18.com