கூடலூர் அருகே ஓவேலியில் புலி ஒன்று விவசாயி ரவிச்சந்திரனை அவரது மனைவி கண்முன் கொன்று தின்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிதைந்த உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதில் 2 போலீசார் காயமடைந்தனர். இது 13 நாட்களில் இரண்டாவது புலித் தாக்குதலாகும்.
கூடலூரில் புலி தாக்கி விவசாயி பலி; மறியலில் போலீசார் மீது கல்வீச்சு
Source: Dinakaran