நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் தமிழக அரசின் வருவாயை விட செலவினங்கள் அதிகரித்ததால், ரூ.20,349 கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மொத்த வருவாய் ரூ.1,17,791 கோடியாக இருக்க, செலவினங்கள் ரூ.1,38,140 கோடியாக உயர்ந்துள்ளது. பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு ஐந்து மாதங்களில் ரூ.30,021 கோடி கடன் பெற்றுள்ளது.
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.20,349 கோடியாக உயர்வு
Source: NewsBytes Tamil