சென்னையில் ஆப்பிரிக்க வணிகர்களாலும் ஆங்கிலேய தாவரவியலாளர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்ட பவோபாப் மரங்கள் பல நூற்றாண்டுகளாக நகரின் சுற்றுச்சூழல் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. கிரீன்வேஸ் சாலை, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், அடையாறு தியோசாபிகல் சொசைட்டி உள்ளிட்ட இடங்களில் இவை காணப்படுகின்றன. வறட்சியைத் தாங்கும் இம்மரங்கள் தமது தண்டில் 5000 லிட்டர் வரை நீரைச் சேமிக்கும் திறன் கொண்டவை.
சென்னையில் 400 ஆண்டு பழமையான பவோபாப் மரங்கள்: 5000 லிட்டர் நீர் சேமிக்கும் திறன்
Source: Kalki Online