செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் ஊழியர்களைப் பாதுகாப்பதே சிங்கப்பூரின் முதன்மை அணுகுமுறை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற ஃபோர்ப்ஸ் உலகளாவிய தலைமை நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அவர், ஆட்குறைப்பை இறுதி முடிவாக மட்டுமே மேற்கொள்ளும்படி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகக் கூறினார். அரசு, முதலாளிகள், தொழிற்சங்கங்களிடையேயான வலுவான கூட்டுறவே இதற்குக் காரணம் என்றார்.
ஏஐ பயன்பாட்டில் ஊழியர்களைப் பாதுகாப்பதே சிங்கப்பூர் அணுகுமுறை: பிரதமர் வோங்
Source: Tamil Murasu