சென்னையின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 10, 11 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் 3,364 படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 2,483 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டுள்ளன. புதிதாகப் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் 2,517 விநியோகிக்கப்பட்டு 1,854 திரும்பப் பெறப்பட்டன; பெயர் நீக்கம் மற்றும் ஆட்சேபனைக்கான படிவம் 7-ல் 9 படிவங்களும், முகவரி மாற்றம் மற்றும் திருத்தத்திற்கான படிவம் 8-ல் 838 விநியோகிக்கப்பட்டு 620-ம் பெறப்பட்டன. அதிகபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 493 படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 379 பெறப்பட்டுள்ளன.
சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாமில் 2,483 விண்ணப்பங்கள்
Source: Dinakaran