உலகப் புகழ்பெற்ற நடிகை எலிஸபெத் டெய்லர் (வயது 44) ஏழாவது முறையாக திருமணம் செய்யவிருப்பதாக அவரது காரியதரிசி அறிவித்தார். மணமகன் முன்னாள் அமெரிக்க கடற்படை காரியதரிசி ஜான் வார்னர் (49); அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். கடந்த ஜூலையில் டெய்லர் தனது ஆறாவது கணவர் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை விவாகரத்து செய்திருந்தார். அமெரிக்காவின் இரண்டாம் நூற்றாண்டு விழாவில் பிரிட்டிஷ் அரசி அளித்த வரவேற்பில் இருவரும் முதன்முதலில் சந்தித்தனர்.
எலிஸபெத் டெய்லர் 7-வது திருமணம்: ஜான் வார்னருடன் இணைவு
Source: Dinamani