தமிழ்நாட்டில் ஒட்டுண்ணி காய்ச்சல் பரவுவதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை வெளியிட்டுள்ளார். இது டிராம்பிகுலிட் மைட்ஸ் எனப்படும் மென் உண்ணிகளால் பரவும் பாக்டீரியா தொற்று. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, நிணநீர் சுரப்பி வீக்கம் ஆகியவை அறிகுறிகள். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உள்உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேதாரண்யம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பரிசோதனை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் ஒட்டுண்ணி காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
Source: Zee Tamil News