ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நதிநீர் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த இரு மாதங்களில் சென்னைக்கு 3 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் இதுவரை 4.08 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர்: ஆந்திரா ஒப்புதல்
Source: Zee Tamil News