தமிழக அரசு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.10க்கு சுத்திகரிக்கப்பட்ட 'பயணி' குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் 17 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
அரசு பேருந்துகளில் ரூ.10க்கு குடிநீர் பாட்டில் திட்டம்
Source: Zee Tamil News