பிஹார் பங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புகளை அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். தொழிலதிபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
பங்கிபூரில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பிரசாந்த் கிஷோர் உறுதி
Source: malaimurasu.com