சீனாவில் பேரிடர் சூழ்நிலைகளை செயற்கையாக உருவாக்கி அனுபவிக்கும் 'டார்க் டூரிசம்' பிரபலமாகி வருகிறது. ஹாங்சோவில் உள்ள ல்வ்சிங் பேஸ் மையம், செயற்கை புயல் மற்றும் வெள்ளத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கிறது. 2024 முதல் 1.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது பேரிடர் கால மீட்பு திறன்களை கற்பிக்கிறது என்றாலும், துயரங்களை வணிகமயமாக்குவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சீனாவில் பேரிடர் அனுபவ சுற்றுலா: புதிய போக்கு
Source: malaimurasu.com