வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வரும் 23 ஆம் தேதி வாக்கில் அர்னாப் புயலாக வலுப்பெறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பில்லை என்றாலும், அதன் தாக்கத்தால் இன்று முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக காவிரி டெல்டா மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகும்: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை
Source: OneIndia Tamil