2026-ஆம் ஆண்டில் தீவிரமடையும் சூப்பர் எல் நினோ தமிழ்நாட்டில் கடும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என சென்னை வெதர்மேன் அஜித்குமார் எச்சரித்துள்ளார். அதிக வெப்பத்தால் மின் தேவை உயர்ந்து, மழை பற்றாக்குறையால் நீர்மின் உற்பத்தி குறைந்து மின்வெட்டு அதிகரிக்கும். பருவமழை பொய்த்தால் அரிசி உள்ளிட்ட உணவுப் பயிர் உற்பத்தி குறைந்து, விலை உயர்வும் பணவீக்கமும் ஏழை, நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கும். வெப்ப அலை, வறட்சி, நோய்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
தமிழ்நாட்டில் சூப்பர் எல் நினோ தாக்கம்: மின்வெட்டு, விலை உயர்வு அச்சம்
Source: malaimurasu.com